(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு இன்று (04) பிரதான வாக்கெண்ணும் நிலையங்களிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டன.
பொதுத் தேர்தல் நாளை இடம்பெறவிருக்கின்ற நிலையில் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 428 வாக்கெடுப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மற்றும் மகாஜனக் கல்லூரிகளில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டன.
வழமைக்கு மாறாக இம்முறை கோவிட் 19 கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுகாதார விதிமுறைகளைப் பேணி இத்தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. மேலும் இத்தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் 194 வாக்கெடுப்பு நிலையங்களும், கல்குடா தொகுதியில் 119 வாக்கெடுப்பு நிலையங்களும், பட்டிருப்புத் தொகுதியில் 115 வாக்கெடுப்பு நிலையங்களுமாக மொத்தம் 428 வாக்கெடுப்பு நிலையங்கள் தயார் நிலையில் உள்ளன.
இதுதவிர இத்தேர்தல் கடமைகளுக்காக 307 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றது. இவற்றில் இம்மாவட்டத்தைச்சேர்ந்த அரச திணைக்கள வாகனங்கள் 159 உம், பிற மாவட்ட அரச வாகனங்கள் 54 உம் ஏனையவை வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனியார் வாகனங்களாகும்.
Post A Comment:
0 comments so far,add yours