(காரைதீவு சகா)
1983களுக்கு முன்பிருந்த தேர்தல் களைகட்டல் இன்று தமிழ்மண்ணில் மீண்டும்வந்திருக்கிறது. சிதறிக்கிடந்த தமிழ்சமுகத்தை ஒரு குடையின்கீழ்ஒனறுசேர்த்திருக்கிறார் கருணா அம்மான். எனவே தமிழ்மக்களின் ஒரே தெரிவுகருணா அம்மானைத்தவிர வேறு யாரும் இருக்கமுடியாது.
இவ்வாறு காரைதீவில் உரையாற்றிய முன்னாள் அம்பாறை மாவட்ட எம்.பி.குணசேகரம் சங்கர் தெரிவித்தார்.
ஒருசில முஸ்லிம் தலைவர்களும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரும் அம்மானின்வருகைகண்டு தலை குழம்பிப்போயுள்ளனர். மண்ணெண்ணெய்யைக்கண்ட சாரைப்பாம்புபோல அவர்கள் தலைதெறிக்க ஓடுகின்றனர். அஞ்சி பிதற்றுகின்றனர் என்றார்.
காரைதீவில் தமிழர் ஜக்கிய சுதந்திரமுன்னணித்தலைவரும் அகில இலங்கைதமிழர்மகாசபை திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமாகிய கருணா அம்மான் எனஅழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரனை ஆதரித்து அ.இ.த.மகாசபையின்தேர்தல் பிரசாரக்கூட்டம் வேட்பாளர் தி.ஞானேந்திரன்(வின்சன்) தலைமையில்காரைதீவின் தெற்கெல்லையில் நேற்றிவு நடைபெற்றது.
அங்கு சங்கர் முன்னாள் எம்.பி மேலும் உரையாற்றுகையில்:
நேற்றுமுன்தினம் காரைதீவில் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் சிலரைவைத்துநடாத்திய த.தே.கூ. கூட்டத்தில் நாவிதன்வெளி பிரதேசசெயலகத்தை நான்பிரிக்கவில்லை என்றும் மாறாக பத்மநாதன் எம்.பி. பிரித்துக்கொடுத்ததாகஅங்கிருந்த தவிசாளரான கலையரசன் பேசியிருக்கிறார்.
உண்மையில் அவரொரு தவிசாளராக வருவதற்கு நான் காரணமாயிருந்திருக்கிறேன்எனும்போது மகிழ்ச்சியாகவுள்ளது. ஆனால் அவர் கூறிய அண்டப்புழுகை நினைத்துபாவப்படவேண்டியுள்ளது.
நாவிதன்வெளி பிரதேச செயலக உருவாக்கம் என்பது இருட்டுக்குள் மூடிமறைத்துநடந்ததொன்றல்ல. நான் எம்.பியாகவிருந்தபோது உள்ளுராட்சி அமைச்சில்அனுமதிஎடுத்து அங்கிருந்த வந்த கல்வெட்டை நானே திறந்துவைத்ததோடு அதற்கானஆவணங்கள் இன்றும் உள்ளன. வேடிக்கையானவிடயம் என்னவென்றால்இப்பிரதேசசெயலகம் திறக்கப்படுகின்றபோது பத்மநாதன் எம்.பியே இல்லைஎன்றவிடயம் கூட இக்கற்றுக்குட்டிக்குத் தெரியாது என்பதுதான்.
கோடீஸ்வரன் இதே காரைதீவு மண்ணில்வைத்து விஞ்ஞாபனத்தை வெளியிட்டு தனதுமாதவருமானமனைத்தையும் கல்விக்கே செலவழிப்பேன் என்று பகிரங்கமாக
தெரிவித்தார். அது ஊடகங்களிலும் வெளிவந்தன. ஆனால் கடந்த நாலரைவருடத்துள்அவ்விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவற்றுள் ஒன்றையாவது அவரால் செய்யமுடிந்ததா?
அல்லது கல்விக்கு ஒரு சதக்காசு வழங்கியுள்ளாரா? 9ஏ 3ஏ புலமைப்பரிசில்சித்திபெற்ற பிள்ளைகளுக்கு ஒரு ரொபியையாவது வழங்கினாரா?
இவ்வாறு மக்களை முற்றாக ஏமாற்றவிட்டு இன்று மீண்டும் அதே தேசியம் கதைத்துலஞ்சத்தோடு வருகிறார். இம்முறை அவருக்கு மக்கள் கொடுப்பது அல்வா. இப்போதேஎழுதிவைத்துக்கொள்ளுங்கள் அவர் தோற்பது 100வீதம் உறுதியாகிவிட்டது.
எமது அணியில் போட்டியிடும் அம்மான் அமைச்சரவை அந்தஸ்துள்ள
அமைச்சராகிறார். அவரோடு போட்டியிட்ட ஒன்பதுபேரையும்கொண்டு இங்கு நிழல்அமைச்சரவையை அமைத்து ஒவ்வொரு துறைகள் பொறுப்பளிக்கப்பட்டு அவர்களினூடாகவே
அவ்வேலைகள் நடாத்தப்படவிருக்கிறது.
அதுமட்டுமல்ல மக்களுக்கான வேலைத்திட்டம் மாதரீதியில்
திட்டமிடப்பட்டுள்ளன. அவ்வப்போது அது நடைபெறும். இவர்கள் தினமும்12மணிநேரம் மக்களுக்காக சேவை செய்யவேண்டும். ஒவ்வொரு தமிழ்க்கிராமமும்அபிவிருத்தி செய்யப்படும்.


Post A Comment:
0 comments so far,add yours