மட்டக்களப்பில் சோகச்சம்பவம்
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த இளம் யுவதி சௌந்ததரஜான்-ஜனனி (19) என்பவர் வீட்டில் தனக்குத்தானே களுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளதபக பொலிஸார் தெரிவித்திதுள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது- குறித்த யுவதி தனது உயர் தரப்படிப்பினை கற்று வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக அவர் தனது படிப்பினை நிறுத்தி விட்டு அவர்களின் குடும்ப கஷ்ரநிலைமையினை சீர்செய்யும் பொருட்டு மட்டக்களப்பில் இயங்கிவரும் தனியார் பரண்டிஸ்கிஸ் நிறுவகத்தில் தொழில் புரிந்து வந்துள்ளார். பின்னர் இந்த நிறுவகத்தில் தொழில் புரிந்து வந்த அண்மையில் வேலைக்கு போவதனை நிறுத்தி விட்டதாகவும் சம்பவ தினமான நேற்று நாடு பூராகவும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் வீட்டு அறையில் தனக்குத்தானே களுத்தில் தூக்கிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி (வடக்கு) பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டார்.
சும்பவம் பற்றிய விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours