(த.தவக்குமார்)
![]() |
covid - 19 நோய்த் தொற்று அபாயநிலை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பேணும் வகையிலான கைகழுவும் தொற்று நீக்கல் திரவம் என்பன வெள்ளிக்கிழமை(14) வழங்கப்பட்டது
பின்தங்கிய பிரதேசங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் தங்குதிறனை மேம்படுத்தும் நோக்கில் தாய் நாட்டிலிருந்து தொழிலுக்காக கட்டார் நாட்டில் புலம் பெயர்ந்து வாழும் சிறு அளவிலான மூவினங்களையும் சேர்ந்த நண்பர்கள் குழாம் தங்கள் உழைப்பின் சிறு பகுதியினை அறப்பணியாகிய கல்விப் பணிக்கு பங்களிப்புச் செய்துள்ளது
இலங்கையில் இவ்வமைப்பின் பிரதேச இணைப்பாளராகச் செயற்படும் களுதாவளையைச் சேர்ந்த திரு கணேசன் கிஷோபன் அவர்கள் மூலம் வித்தியாலய அதிபர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இவ்வுதவி வழங்கப்பட்டது
இதுதொடர்பாக வித்தியாலயத்தின் அதிபர் திருஇகஇஜெயகரன் கருத்துரை வழங்குகையில் எமது பாடசாலையானது மிகவும் பின்தங்கியதும்இஅடிப்படை வசதிகள் அற்றதும்இநிலையான வருமான வழிகள் அற்றதுமான குடும்பங்களைக் கொண்ட 200 க்கு மேற்பட்ட மாணவர் தொகையினைக் கொண்டு தரம் 01தொடக்கம் 11வரை அமைந்த பாடசாலையாகும்.
இது கடந்த காலங்களில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் 100 வீத சித்தியினைப் பெற்று சாதனை படைத்துள்ளதோடு க.பொ.த.சாதாரண தரத்திலும் கல்வி அடைவில் ஏறுமுகம் காட்டி வருகின்றது இவ்வாறான சாதரண மாணவர்களை சாதனையாளராக உருவாக்கும் எமது பணிக்கு உறுதுணையாக உதவிகளை வழங்கும் நல்லுள்ளங்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களின் நல்வாழ்வுக்காக பாடசாலை சமுகம் சார்பாக பிராத்திப்பதாகவும் தெரிவித்தார்
மேலும் தங்களது குடும்பம் சார்ந்த நலனுக்காக அன்னியர் தேசங்களில் தொழில் தேடிச் சென்று வியர்வை சிந்தி உழைத்து தன்குடும்பம்இதன்னினம் தன்வாழ்க்கை என சுயநலமாந்தர்கள் வாழும் இன்றைய சூழலில் சமுகநலன்கருதி கல்விக்காக தங்கள் உழைப்பின் சிறு பகுதியினை நற்பணிக்காக நல்கி ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக மிளிர்வது பாராட்டுக்குரியதாகும்இ
மேலும் தற்போதுள்ள covid-19 நோய்த் தொற்று சூழலில் மாணவர்களின் கற்றல் வெகுவாகப் பாதிப்படைந்து பின்னடைவான நிலையில் காணப்படுகின்றது இவற்றிலிருந்து மீட்சி பெற மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை வலுவூட்டும் வகையில் மேலதிக செயற்பாடுகளை எம்போன்ற பிரதேசப் பாடசாலைகள் நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றன எனவே இவ்வாறான பாடசாலைகளுக்கு மேலும் சமுகநலன் சார்ந்த புலம்பெயர் அமைப்புகள் முன்வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.
காலத்தினால் செய்த உதவி சிறிதெனிலும் ஞாலத்தில் மிகப்பெரிது.








Post A Comment:
0 comments so far,add yours