கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்த மக்களையும் ஒன்று சேர்த்து கட்சியை
கட்டியெழுப்புவேன் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்
சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எனக்கு
வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் அனைவருக்கும் பொதுவான நாடாளுமன்றஉறுப்பினராக செயற்படுவேன்.

வருங்காலத்தில் தமிழ் தேசியத்தினை கட்டியெழுப்புவது எனது மிகவும்
முக்கியமான கடமையாக இருக்கும். தமிழரசுக்கட்சியை மீள கட்டியெழுப்பி
வெற்றியை நோக்கி கொண்டுசெல்வதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுப்பேன்.கட்சியின் மத்திய குழு எடுக்கும் தீர்மானங்களை கட்டியெழுப்புவது எனதுகடமையாக இருக்கும்.

கிழக்கினை மீட்கப்போகின்றோம் எனவும் பிரதேசவாதங்களையும் பேசி
வாக்குகேட்டவர்கள் அனைவரும் அமைச்சு பதவிகளை இந்த அரசாங்கத்திடம்கோரவேண்டும்.

அதன்மூலம் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவீர்கள் என்றுஎதிர்பார்க்கின்றோம். அதேபோன்று அதனைவிட தமிழ் தேசியத்தினை புறக்கணித்துஅபிவிருத்திக்காக வாக்களித்த மக்கள் அவர்களின் காரியாலயத்தினைமுற்றுகையிட்டு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அழுத்தங்களைவழங்கவேண்டும்.

எங்களிடமும் வாருங்கள் தமிழர்களுக்கு எங்காவது அநீதி நடந்தால், தமிழர்களின்நில அபகரிப்பு, தமிழர்களுக்கு எதிராக ஏதாவது அநீதி நடைபெற்றால் அதற்குஎதிரான குரலை நாங்கள் வழங்குவோம். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை செய்வோம் என்ற அடிப்படையில் தமிழர்களின்உரிமையினை பாதுகாக்கும் வகையில் செய்யக்கூடிய அனைத்து அபிவிருத்திகளையும்செய்வோம்.

அத்தோடு சர்வதேச சமூகத்துடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை
முன்னெடுப்பதற்கு நாங்கள் சிந்தித்துக்கொண்டிருக்கின்றோம்.அபிவிருத்தி
செய்வோம் என்று கூறிவந்தவர்கள் செய்யமுடியாத சில வேலைத்திட்டங்களை நாங்கள்செய்வோம்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தாமை காரணமாகவே அங்குள்ள மக்கள்வேறு கட்சிக்கு வாக்களிக்கும் நிலைமை ஏற்பட்டது. அம்பாறை மாவட்டம் என்பதுவடகிழக்கு மாகாணத்தின் முக்கிய பகுதியாகும்.
வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் தமிழர்களின் பிரதிநிதித்துவம் அங்குஉறுதிப்படுத்தப்படவேண்டும். அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் ஆசனம் அம்பாறைக்கு வழங்கப்பட்டதை நான் வரவேற்கின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை அம்பாறை மாவட்ட மக்கள் கைவிட்டாலும் தமிழ் தேசியகூட்டமைப்பு கைவிடவில்லை. அம்பாறை மாவட்ட மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ்தேசிய கூட்டமைப்புதான் என்பதை அம்பாறை மாவட்ட மக்கள் உணர்ந்துகொள்வார்கள்.அம்பாறை மாவட்டத்தில் வாக்கினை பிரித்து பிரதிநிதித்துவத்தினைஇல்லாமல்செய்தவருக்கு அவரை அங்கு இறக்கிய கட்சியினர் ஒரு தேசிய பட்டியல்ஆசனத்தினை வழங்கியிருக்கமுடியும்.

எதிர்காலத்தில் கல்முனை பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை பூரணமாகவழங்குதற்கு தேவையான அழுத்தங்களை அரசாங்கதிற்கு தொடர்ச்சியாக வழங்குவேன்“எனக் குறிப்பிட்டுள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours