காரைதீவு  நிருபர் சகா

இன்று   திங்கள் கிழமை(17) முதல் செயற்படும்படியாக கிழக்கில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயப்பணிப்பாளராக  மீண்டும் அகிலாகனகசூரியமும்

அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளராக ஏ.எல்.எம்.காசிமும்  மீண்டும் நியமனம் பெற்றுள்ளனர்.


இவர்கள் இருவரும் ஏலவே குறித்த வலயங்களில் வலயக்கல்விப்பணிப்பாளரார்களாகப் பணியாற்றியவர்கள். இலங்கை கல்வி நிருவாகசேவை தரம் 1ஜச் சேர்ந்த அதிகாரிகளாவார்.



கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எல்.கே.ஜி.முத்துபண்டா இந்நியமனத்தைச் செய்துள்ளார். நியமனம் வழங்குகையில் கிழக்கு மாகாண கலவிப்பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாம் உடனிருந்தார்.



மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு வலயக்கல்விப் பணிப்பாளராக அகிலா கனகசூரியம் நியமிக்கப்பட்டுள்ளார்.



குறித்த கல்வி வலயத்திற்கு கல்வி நிர்வாகசேவை வகுப்பு 1ஐ சேர்ந்தவரை நியமிக்கும் பொருட்டு கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் அண்மையில் நேர்முகத்தேர்வு நடாத்தப்பட்டது. இந்நேர்முகத்தேர்வில் அதிக புள்ளிகளைப் பெற்ற அகிலா கனகசூரியம் வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



இன்று  திங்கட்கிழமை(17) முதல் செயற்படும் வண்ணம் இந்நியமனக்கடிதம் கல்வி அமைச்சின் செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வலயக்கல்விப் பணிப்பாளர் கல்வி அமைச்சின் திட்டமிடல் பிரதிக்கல்விப் பணிப்பாளராகவும் மூதூர் வலயக்கல்விப்பணிப்பாளராகவும் கடமையாற்றியதுடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இதேவேளை அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிப்பாளராக ஏ.எல்.எம்.காசிம் நியமிக்கப்பட்டுள்ளார். மூதூர் வலயக்கல்விப்பணிப்பாளாராகவிருந்த இ.க.நி.சேவை தரம் 1ஜச் சேர்ந்த ஜனாப் காசிம் நாளை 17ஆம் திகதி முதல் செயற்படும்படியாக  நியமிக்கப்பட்டுள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours