தலதா பெருமானுக்காக விசேட மர வேலைப்பாட்டுடன் கூடிய நிர்மாணமொன்று தியாகம் செய்யப்பட்டது....
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (2020.08.03) முற்பகல் தலதா பெருமானை வழிபட்டு ஆசீர்வாதம் பெற்றார்.
தலதா பெருமான் எழுந்தருளியுள்ள தளத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள மர வேலைப்பாட்டுடன் கூடிய நிர்மாணம் பிரதமரினால் திறந்து வைக்கப்பட்டது.
பிரதமரின் நன்கொடையில் இந்த மர வேலைப்பாட்டுடன் கூடிய நிர்மாணம் தலதா பெருமான் எழுந்தருளியுள்ள தளத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
தலதா மாளிகையின் வரலாற்றை பாதுகாக்கும் வகையில் தொல்பொருள் திணைக்களம் போன்று அஸ்கிரிய மல்வத்து மஹா விகாரை பீடத்தின் அனுமதியுடன், இந்த மர வேலைப்பாட்டுடன் கூடிய நிர்மாணம் தலதா பெருமானுக்கு தியாகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனையடுத்து, பிக்குமார் ஐம்பது பேருக்கு தானம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் அஸ்கிரி பீடத்தின் மஹாநாயக்கர், அஸ்கிரி விஜே சுந்தராராம விகாராதிபதி அதிவணக்கத்திற்குரிய வரகாகொட ஞானரதன தேரர், அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர், கண்டி அஸ்கிரி கெடிகே ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய எபாலி தேரர், மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் நியங்கொட விஜிதசிறி தேரர் உள்ளிட்ட பிக்குமார் கலந்துக் கொண்டனர்.







Post A Comment:
0 comments so far,add yours