(த.தவக்குமார்)
மட்டக்களப்பு கல்குடா ரெயில் கடவையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை மாலை மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சரக்கு ரெயிலுடன் கென்ரர் ரக வாகனமொன்று மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனமானது தமது வேக கட்டுப்பாட்டினை இழந்து ரெயில்வே பாதுகாப்பு கடவையினையும் உடைத்துக் கொண்டு எதிரே வந்த ரெயிலுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவித்தனர்.

இதன் போது மட்டக்களப்பு சேத்துக்குடாவைச் சேர்ந்த செபஸ்ரியன் அருள்நாதன் வயது(48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டடுள்ளது. குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share To:

Post A Comment:

0 comments so far,add yours