(த.தவக்குமார்)
இரத்தினபுரி – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையை விரைவில் பூர்த்தி செய்வோம்....
நாட்டின் உற்பத்திகளுக்கு சிறந்த விலை....
குறிப்பிட்ட அபிவிருத்தி இலக்கை வெற்றிக்கொள்ள திறமையுள்ள ஒரு அரசாங்கத்தை உருவாக்குங்கள்....
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர்இ கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
வேலை செய்யக்கூடியவர்களிடம் நாட்டை ஒப்படைப்பதற்கான காலம் வந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர்இ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகல கஹவத்த பிரதேச சபை மண்டபத்தில் இன்று (2020.07.31) முற்பகல் நடைபெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
யுத்தத்தை நிறைவு செய்து விரைவான அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு திட்டமிட்டிருந்தாலும்இ நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமையால் நாட்டின் அபிவிருத்தி ஸ்தம்பித்ததாக பிரதமர் தெரிவித்தார்.
கொழும்பு முதல் இரத்தினபுரி வரையான அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறித்து இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர்இ போக்குவரத்து நெரிசல் காரணமாக வீணாக வீதியில் செலவிடப்படும் காலத்தை குறைத்துஇ மக்களின் நன்மை கருதி செயற்படுவதற்கான காலம் விரைவில் உதயமாகும் என குறிப்பிட்டார்.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் தலைவர் என்பதால் அவருடைய சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தை அங்கீகரித்தது போன்றுஇ இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கான பலத்தை கொண்ட பாராளுமன்றத்தை உருவாக்குவதற்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.
நாட்டின் உற்பத்திகளுக்கு சிறந்த விலையை பெற்றுக் கொடுக்கும்இ குறிப்பிட்ட அபிவிருத்தி இலக்கை வெற்றிக்கொள்ள திறமையுள்ள ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கு இம்முறை தேர்தலில் கட்சி நிற பேதமின்றி அனைத்து மக்களது வாக்குகளையும் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
குறித்த சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேமலால் ஜயசேகரஇ ஜானக வக்கும்புர மற்றும் இம்முறை பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் கலந்துக் கொண்டிருந்தன


Post A Comment:
0 comments so far,add yours