(த.தவக்குமார்)
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விபுலாந்த வீதி,சேத்துக்குடாவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை தேவதாஸ் கிங்ஸ்லி (31) என்பவர் தனது வீட்டில் தனக்குத்தானே களுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளதபக பொலிஸார் தெரிவித்திதுள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது குடும்பத்தகறாரு காரணமாக அவரின் வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டு அறையில் தனக்குத்தானே களுத்தில் சுருக்கிட்டுள்ளார்.அவரின் பிள்;ளைகள் வீட்டுக்கு வந்து தந்தையை கூப்பிட்டபோது வெளியில் வராத நிலையில் வீட்டின் பின்புறமாக சென்று பார்த்தபோது சுருக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக விசாரணையின் போது அறியமுடிந்துள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி (வடக்கு) பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் பற்றிய விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours