(றாசிக் நபாயிஸ், அம்பாறை மாவட்ட பிராந்திய நிருபர்)
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவ அமைப்பான மனாரியன்- 99 நண்பர்கள் வட்ட சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (2020/09/20) மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் "நாம் உதிரம் கொடுப்போம் உயிர்காக்க உதவிடுவோம்" எனும் தொனிப்பொருளில் அமைப்பின் தலைவர்
எம்.ஜ.முஹம்மட் சியாப்
தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று காலை 8 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுகளில் காணப்படும் இரத்த தட்டுப்பாட்டை இல்லாமல் செய்யும் நோக்கில்
தொடர்ச்சியாக நான்காவது வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இவ்விரத்ததான முகாமில் வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின் அணுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்விற்கு இரத்த வங்கி பிரிவின் வைத்தியர்களான டாக்டர்: கே.வித்தியா, டாக்டர் :ஜ.எல்.டிலாரஸ் பானு மற்றும் தாதி உத்தியோகத்தர்கள்
போன்றோரின் பங்குபற்றலுடன் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
ஆண்கள் பெண்கள் என பலர் கலந்துகொண்ட இவ்விரத்ததான முகாமில் முதலாவது இரத்த கொடையாளியாக அல்-மனார் மத்திய கல்லூரியின் அதிபர் MJ.அப்துல் ஹசீப் அவர்கள் கலந்து கொண்டு முதலாவதாக





Post A Comment:
0 comments so far,add yours