த.தவக்குமார்
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு சொட்கண் ரக துப்பாகி ஒன்றினை இள்று (17) விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த பிரதேசத்தினை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தும்போது குறித்த துப்பாக்கியினை மீட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கி காணப்பட்ட பிரதேசம் கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக காணப்பட்டதாகவும் அப்பிரதேசம் புலிகளின் விமலன் பயிற்சி முகாம் அமைந்திருந்ததாக அறியமுடிகின்றது.மீட்கப்பட்ட துப்பாக்கி வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.



Post A Comment:
0 comments so far,add yours