(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு அமிர்தகழி சுக்குறு ஒழுங்கையில் நேற்று மாலை 6.30 மணியளவில் தாயும் மகளும் தங்களின் வீட்டில் இருந்து கொண்டு தங்களின் வீட்டுவேலைகளை செய்து கொன்டிருக்கும் வேளையில் திடிர் என தங்களின் வீட்டுக்குள் நுழைந்த நான்கு நபர்கள் கத்தியினை கழுத்தில் தாய்கும் மகளுக்கும் வைத்து தாங்கள் அணிந்திருக்கும் தங்க மாலையினை தராவிட்டால் கழுத்தை அறுத்துவிடுவதாக கூறி மிரட்டல் விடுத்ததை தொடர்து பிதியடைந்த தாயும் மகளும் தாங்களாகவே மாலையை கழற்றி கொடுத்துள்ளனர்.
அமிர்தகழி சுக்குறு ஒழுங்கையில் அமைந்துள்ள தங்களின் வீட்டில் தாயும் மகளும் தனியாக வசித்துவந்தவேளையில்த்தான் இவ்வாறான கொள்ளை சம்பவம் நேற்று (2) நடைபெற்றுள்ளது இவர்களின் வீட்டிற்கு எதிராக கைவிடப்பட்ட நிலையில் ஒரு வீடு உள்ளது அங்கு சட்டவிரோத செயல்களில் சிலர் ஈடுபட்டு வந்தது சில நாட்களாக அவதானிக்கமுடிந்தது.
போதைப்பொருட்கள் பாவனையில் ஈடுபட்டு வந்தவர்களினால்த்தான் இப்படியான செயல் நடந்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது சம்பவம் நடைபெற்ற சமையம் அவ்விட்டில் மது அருந்திய நிலையில் ஒருவர் மட்டக்களப்பு பொலிசாரினால் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரனைகள் நடைபெற்று வருவதாகவும் மேலும் சந்தக நபர்கள் கைது செய்யப்படவுளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது

Post A Comment:
0 comments so far,add yours