மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேளவாத்திய கலைஞரான இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
திருப்பழுகாமம் 02ஆம் குறிச்சியுள்ள உள்ள வீடு ஒன்றின் முன்பகுதியில் தொங்கிய நிலையில் குறித்த வீட்டை சேர்ந்த வி.புவிதாசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு ஆலயம் ஒன்றுக்கு மேள வாத்தியம் இசைக்க சென்றவரே காலையில் வீட்டின் முன்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சடலம் மரண விசாரணையை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours