எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு  


சமகால நிலைமைக்கேற்ப மட்டக்களப்பு மாவட்ட நிருவாகத்தினைக் கொண்டு செல்ல சிவில் சமுகம் ஒத்துழைப்பு நல்கவேண்டும் அரசாங்க அதிபர் கருணாகரன் வேண்டுகோள்

சமகால நிலைமைக்கேற்ப மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியினையும், பொருளாதாரத்தினையும், மக்களின் சுமுகமன வாழ்கைத் தரத்தினை மேம்படுத்தி மாவட்ட நிருவாகத்தினைக் கொண்டு செல்ல சிவில் சமுகம் ஒத்துளைப்பு நல்கவேண்டுமென மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திர. க. கருணாகரண் வேண்டுகோல் விடுத்தார்.

மட்டக்களப்பு சிவில் சமுகத்தினருக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்குமிடையிலான உததியோகபூர்வ சந்திப்பொன்று இன்று (24) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேய அரசாங்க அதிபர் கருணாகரன் இவ்வாறு வேண்டுகோல் விடுத்தார். 

இச்சந்திப்பின்போது மாவட்டத்தின் சமகால நிலைமை, அதன் அபிவிருத்தி மற்றும் எதிர்காலத் நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் 19 கொரோனா தொற்று காரணமாக அதன் பரவலினைக் கட்டுப்படுத்தி மாவட்ட மக்களைப் பாதுகாப்பதற்காக மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும், 

இப்பிரதேசத்தில் அதிகரித்துவரும் தற்கொலை முயற்சிகள் போன்ற வற்றுக்கு உளவளத்துனை செயற்பாடுகள் வழங்கப்பட்டு இவற்றினைத் தடுத்து நிறுத்துவதற்கேற்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவேண்டுமென சிவில் சமுகத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும் இம்மாவட்டத்தில் காணப்படும் விவசாயம், விலங்கு விவசாயம் மற்றும் பால் பண்ணை உற்பத்திக்குத் தேவையான நீரினை வழங்கும் தூர்ந்துபோயுள்ள குளங்களை புனருததானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், 

மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட எல்லைப் பிரச்சினைகளான களுவாஞ்சிக்குடி எல்லைப் பிரச்சினை, மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரை பகுதிகளில் காணப்படும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் காணப்படவேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

இதுதவிர மட்டக்களப்பு நகர்பகுதிகளில் நடைபாதைகளில் வாகனங்கள் தரித்து வைப்பதினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மாநகர சபையுடன் இணைந்து தீர்வு காணப்படவேண்டியதுடன், மாவட்டத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகளுக்குமான தீர்வுகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்து. 

சிவில் சமுக அமைப்பின் இக்கருத்துக்களை உள்வாங்கிய அரசாங்க அதிபர் கருணாகரன் சமகால நிலைமைகளுக்கேற்ப மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் தேவையான நடவடிக்கைகளை தமது நிருவாகத்தினூடாக முன்னெடுப்பதற்கு சிவில் சமுகத்தின் ஒத்துளைப்புகள் தேவை எனக் கோரிக்கை விடுத்தார். 

இச்சந்திப்பின்போது மாவட்ட உதவி செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, மட்டக்களப்பு சிவில் சமுக அமைப்பின் தலைவர் கே.எஸ். மாமாங்கராஜா, முன்னாள் மேலதிக அரசாங்க அதிபர் திரு. அருனகிரிநாதன் உட்பட சிவில் சமுக அமைப்பின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours