மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் (7) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது.
கடந்தகாலங்களில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பதற்கு அரசாங்க திணைக்களங்கள் செயல்ப்பட்டுதோ அதைப்போன்று சகலரதும் ஒத்துளைப்பும் எமது மாவட்டத்தின் மக்களை காப்பாற்றுவதற்கு உதவவேண்டும் எனவும். மாவட்டத்தில்; பொது இடங்களில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கப்படல் வேண்டும்.
பொது போக்கு வரத்துக்கள் கடுமையான கண்காணிப்பதற்காக பொலிஸ் இரானுவத்தினருடன் சுகாதார பிரிவினர் கடமையில் ஈடுபடவுள்ளனர் சிறுவர் பூங்காக்கள் முற்றாக மூடுமாறும் தனியார் கல்வி நிலையங்களையும் மறு அறிவித்தல் வரைமூடுவதாகவும் சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சமூக இடைவெளி முகக் கவசங்கள் கைகழுவுதல் போன்றவற்றை தொடர்ந்து பேனப்படல் வேண்டும் என்ற அறிவித்தல் ஒலிபெருக்கியூடாக மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்ற தீர்மாணம் எடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை பார்வையிடுவோருக்கான இரண்டு பாஸ்கள் வழங்கும் நடைமுறை கானப்பட்டது தற்போது ஒருவருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையின்றி தங்களின் வீடுகளை விட்டு வெளியேறவேண்டாம் எனவும் ஆலயங்களி சினிமா திரையரங்குகள் இசைநிகழ்ச்சிகள் களியாட்ட நிகழ்வுகள் அணைத்தும் முற்றாகதடைசெய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு மேலதி அரசாங்க அதிபர் திருமதி சுதர்~pனி ஸ்ரீகாந்த் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அச்சுதன் போதனாவைத்திய சாலையின் பணிப்பாளர் திருமதி கலாரஞ்சினி கனேசலிங்கம் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் லக்சிறி விஐயசேன இரானுவ கட்டளை தளபதி மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ் வைத்திய அத்தியட்சகர்கள் என பலரும் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்
Post A Comment:
0 comments so far,add yours