(   எஸ்.சதீஸ் )


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில், பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றின் மூலம் ஒரு தொகுதி தேக்கு மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.


பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக, பாவற்கொடிச்சேனை - இருட்டுச்சோலைமடு பகுதியில் சனிக்கிழமை (19) வவுணதீவு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின்மூலம் உழவு இயந்திரத்தில் அனுமதிப் பத்திரம் இல்லாது ஏற்றிவந்த 18 தேக்கு மரக் குற்றிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சீ.ஐ. நிஷாந்த  தெரிவித்தார்.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி. நிஷாந்த, உதவி பொலிஸ் பரிசோதகர்ஆர்.எம்.சஜித், பொலிஸ் உத்தியோகத்தர்களான லோஜிதன்(8626), தினேஸ்(8556),ரூக்‌ஷந்தன்(8981), வுத்திக்கே(90088), ஜெயசுந்தர(91132), ஸ்சமாத்(88503) போன்றார் அடங்கியபொலிஸ் குழுவினரே  இந் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.


கைதுசெய்யப்பட்ட உழவு இயந்திரத்தினுடனான மரங்களையும் குறித்த நபரையும்  ஞாயிற்றுக்கிழமை (20) மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சீ.ஐ. நிஷாந்த  தெரிவித்தார்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours