இந்நிகழ்வில் புளியந்தீவு தெற்கு வட்டார மாநகரசபை உறுப்பினர் அ.கிருரஜன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் ஆலோசகர்களான ச.சனத்குமார், செ.டேவிட் பிரகாஸ், புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையத்தின் தலைவர் எம்.டினிஸ், செயலாளர் மே.துதிகரன், பொருளாளர் தி.கிசாந்தன், நிருவாக உறுப்பினர்களான பி.திருச்செல்வம், ம.தருமலிங்கம், ற.வின்சன் உட்பட கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தற்போதைய கொரோனா நிலைமையினைக் கருத்திற்கொண்டு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மிகவும் எளிமையான முறையிலும், மட்டுப்படுத்தப்பட்டோரின் பங்குபற்றுதலுடனும் மேற்படி நிகழ்வு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.இதன்போது கழகத்தினால் அமைக்கப்பட்ட மின்குமிழ் அலங்காரத்தினாலான 30 அடி உயரமான கிறிஸ்மஸ் மரமானது மாநகரசபை உறுப்பினர் அ.கிருரஜன் மற்றும் புளியந்தீவு தெற்கு சனசமூக நிலைய பொருளாளர் தி.கிசாந்தன் ஆகியோரால் ஒளிரூட்டபப்பட்டது. அதேவேளை சனசமூக நிலைய தலைவர் உட்பட நிருவாக உறுப்பினர்கள், ரிதம் இளைஞர் கழக ஆலோசகர்களினால் பாலன்குடில் திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பித்தக்கது.







Post A Comment:
0 comments so far,add yours