(வி.ரி.சகாதேவராஜா)
கொரோனாத் தொற்றிருந்து மக்களையும் நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி வரலாற்றுப் பிரசித்திபெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தில் பிரார்த்தனை வழிபாடு இன்று ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்றது.
பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
விசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் பாண்டிருபபு திரௌபதை ஆலயத்தின் பிரமகுரு சக்திபுசகர் அ.சிவரெட்ணம் சிவஸ்ரீ சபாரெத்தினக்குருக்கள் தலைமையில் அதிகாலை 05.30 மணிக்கு இடம்பெற்றது.
பஞ்சபுராணம் ஓத சிவாச்சாரியார் அழைததும் வழமையாகப்பாடுவேர் அதிகாiயில் வராமையினால் மேலதிக அரச அதிபர் ஜெகதீசன் பாடினார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் மாவட்ட இந்த கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி மற்றும் தர்மகர்த்தாக்கள் பூசை முகாமைக்காரர்கள், ஏனைய ஆலயங்களின் நிர்வாகத்தினர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours