மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேக பூசை இன்று (19) அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு மிகவும் எளிமையான முறையில் கொரோனா தொற்றுக்காரணமாக சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்துக்கொண்டு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு ஜெகதீசக்குருக்கள் மற்றும் அவரது குழுவினரால் விஷேட அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற்றது. ஆலய கும்பாபிஷேகம் இடம்பெற்று 4 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 108 சங்குகளை கொண்டு இவ் விஷேட சங்காபிஷேக நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours