(றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)
------------------------------ -----------------------------
கல்முனை பிரதேச செயலகப் பிரிவில்இணைத்துக் கொள்ளப்பட்ட 25
பட்டதாரி பயிலுனர்களுக்கானயோகா பயிற்சி, கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான மூச்சுப் பயிற்சியுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்வு கல்முனை பிரதேச செயலக மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் இம்திஸா ஹஸனின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இன்று (19) இடம் பெற்றது.
இவ்விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வுக்கு வளவாளராக திருகோணமலையைச் சேர்ந்தசர்வதேச யோகா பயிற்றுவிப்பாளர் வி.விஜயானந்தி கலந்து கொண்டு
பயிற்சிகளை வழங்கினார்.
இதன் போது இதன் யோகாவின் நோக்கங்கள்,
மூச்சுப் பயிற்சி, உடல் பயிற்சி, ஆசன வகைகள், உணவுப் பழக்க வழக்கம்
மற்றும் தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான பயிற்சியுடன் கூடிய தகவல்களும் வழங்கப்பட்டது.

Post A Comment:
0 comments so far,add yours