நவீன தகவல் தொழிநுட்பத்தின் ஊடாக காணொலிக் கலந்துரையாடல்களை மேம்படுத்தும் நோக்கில் யுனிசெப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் செர்றி நிறுவனத்தின் பங்களிப்புடன் மட்டக்களப்பு மாநகர சபைக்கென 55 அங்குல ஸ்மார்ட் தொலைக்காட்சியொன்று இன்று மாநகர ஆணையாளர் மாணிக்கவாசகர் தயாபரன் அவர்களிடம் (13) வழங்கி வைக்கப்பட்டது.
சிறுவர் நேய மாநகர கருத்திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் வதியும் இளைஞர்களும்இ சிறுவர்களும் மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் நேரடியாக காணொலி மூலம் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பினை வழங்கும் நோக்கில் குறித்த ஸ்மார்ட் தொலைக்காட்சியானது பயன் படுத்தப்பட உள்ளதாக மாநகர ஆணையாளர் மாணிக்கவாசகர் தயாபரன் அவர்கள் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையினை சிறுவர்நேய மாநகரமாக மாற்றியமைக்க வேண்டும் என்ற சிந்தனையில் யுனிசெப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் செர்றி நிறுவனத்தின் பங்களிப்போடு சிறுவர்களுக்கு புத்துணர்ச்சியினையும்இ புத்தாக்கத்தையும் தூண்டடிக் கூடிய வகையில் நவீன தொழிநுட்பங்களுடன் கூடிய விளையாட்டு வசதிகளுடன் லொயிட்ஸ் பார்க் சிறுவர் பூங்கா அமைக்கப்படுவதாக மாநகர ஆணையாளர் இதன் போது மேலும் கருத்துத் தெரிவித்தார்.
அத்துடன் சிறுவர்களைக் கவரும் வகையில் நகர அழகுபடுத்த பல்வேறு செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்இ எதிர்காலத்தில் சிறுவர்களுக்குரிய வசதிகளை மேம்படுத்தி அவர்களுக்குரியஇ மகிழ்ச்சிகரமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் பணிகளையும் இச் சிறுவர் நேய மாநகரக் கட்டமைப்பின் ஊடாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் கொவிட் 19 காலத்தில் காணொலியின் ஊடான தொடப்பாடலினை விரிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மாநகர சபைப் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள்இ சிறுவர்கள் மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் நேரடியாக கலந்துரையாடுவதற்கான வாய்ப்பையும் இதன் ஊடாக பெற்றுக் கொள்ள கூடியதாக இருக்கும் என்றும் சுட்டிக் காட்டினார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் உ.சிவராஜாஇ செரி நிறுவனத்தின் தேசிய நிகழ்ச்சித்திட்ட பொறுப்பாளர் எபநேசர் தர்ஷன்இ மாநகர சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்களான நித்தியானந்தன்இ திருமதி ஜெயகௌரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Post A Comment:
0 comments so far,add yours