( வி.ரி.சகாதேவராஜா)


சம்மாந்துறை வலயத்திலுள்ள வீரமுனை இராமகிருஸ்ணா மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் சம்மாந்துறை ஆசிரியரொருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியரின் மனைவியும் ஒரு ஆசிரியை. அவர் இறக்காமத்தில் வேறொரு பாடசாலையில் கற்பிக்கிறார். அவருக்கு கொரோனா உறுதிப்பட்டதையடுத்து புதன்கிழமை இவருக்கும் பிசிஆர் சோதனை மேற்கொண்டபோது இவருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனால் கடந்த வியாழன் வெள்ளி தினங்களில் பாடசாலைக்கு மாணவர் வரவு மிகவும் குறைவாக இருந்ததோடு சம்பந்தப்பட்ட ஆசிரியரோடு நெருக்கமாக இருந்த ஆண்ஆசிரியர்களை வரவேண்டாமென்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால் கடந்த இரு நாட்களாக பாடசாலையின் கற்றல் கற்பித்தல் சூழல் ஸ்தம்பிதநிலையடைந்துள்ளது.

இது தொடர்பில் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீமிடம் தொடர்புகொண்டு கேட்டபோது ஆசிரியருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து உடனடியாக அதிபருடன் தொடர்புகொண்டு அவரோடு பழகிய ஆசிரியர்களை வெள்ளிவரைக்குமாவது பாடசாலைக்கு வருவதை தவிர்க்கவேண்டும் எனவும் எதற்கும் சுகாதாரத்துறையினரின் அறிவுரைகளை கட்டளைகளை பின்பற்றுமாறும் கூறியிருந்தேன்.என்றார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours