(ஷமி மண்டூர்)
இலங்கையின் புகழ் பெற்ற மூத்த ஒலிபரப்பாளர்இஎழுத்தாளர் ஜோஜ் சந்திரசேகரனின் கலை வாரிசு இவர்.இளமையிலேயே கலை இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டுள்ள இவர் பல நூல்களையும் எழுதிதியுள்ளார்.பாடசாலை நாட்களிலிருந்தே கலை இலக்கிய முயற்சிகளில் ஆர்வம் காட்டியவர்.
வர்த்தக முகாமைத்துவ துறையாக இருந்தாலும் நுண்கலைத் துறை செயல்பாடுகளில் ஆர்வம் காட்டியவர். கலாநிதி பாலசுகுமாரின் 'ஆற்றைக் கடத்தல்' நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்தவர் .கவிதை அரங்குகளில் தன் தமிழ் திறனால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
நம் மண்ணின் மகுடங்களில் ஒன்றாக விளங்கும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் இவரது தலைமையில் புதிய எழுச்சி பெறும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.பொருத்தமான ஒருவர் பணிப்பாளராக பொறுபேற்கிறார் .
இன்று(15) திங்கட்கிழமை முதல் கடமைகளைப் பொறுப்பேற்பதாக அவர் தெரிவித்தார்.


Post A Comment:
0 comments so far,add yours