எஸ்.சதீஸ் - 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டு பரிசு வழங்கும் நிகழ்வு கரடியனாறு இந்து வித்தியாலயத்தில்  ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது.

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் 1994ம் வருட உயர்தர உயிரியல் பிரிவு பழைய மாணவர்களின் உதவியுடன் இந் நிகழ்வு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ,ஜெயக்குமணம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது  தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இக் கோட்டத்தில் கூடிய ஆறு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும், சுமார் 140 மாணவர்களுக்கு புத்தகப்பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது இம் மாணவர்களைக் கற்பித்த ஆசிரியர்களும்  நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் 1994ம் வருட உயர்தர உயிரியல் பிரிவு பழைய மாணவர்களால் 12வது வருடமாக இந்த பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றுவருவதாகவும் தொடர்ந்தும் இவ்வாறான மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த தமது உயிரியல் பிரிவு பழைய மாணவர் சங்கம் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இதன்போது இவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம்,  கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ,ஜெயக்குமணம், ஆசிரிய ஆலோசகர் மா. தேவதாசன் மற்றும் சிவானந்தா தேசிய பாடசாலையின் 1994ம் வருட உயர்தர உயிரியல் பிரிவு பழைய மாணவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours