(றாசிக் நபாயிஸ்,
மருதமுனை நிருபர்)

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி மத்திய நிலையத்தின் கீழ் இயங்கி வரும் "வேர் நதி" பெண்கள் அமைப்பினருக்கு மத்தியஸ்த சபை தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு 
கல்முனை, பாண்டிருப்பு பிரதேசத்தில் காணப்படும்
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி மத்திய நிலையத்தின் அலுவலக உத்தியோகத்தர் ஆர்.அனுஷ்காவின் நெறிப்படுத்தலில்
பிரதேச இணைப்பாளர்
யூ.எல்.கபீலாவின் தலைமையில் இன்று (17) நிலையத்தின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வுக்கு வளவாளராக கல்முனை பிரதேச செயலக மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் இம்திஸா ஹஸன் கலந்து கொண்டு தகவல்களை வழங்கினார்.

இதன் போது மத்தியஸ்த சபை ஏன் உருவானது, அதன் நோக்கங்கள் என்ன? அதன் செயற்பாடுகள், எவ்வகையான பிரச்சினைகளை எடுத்து ஆற்றுப்படுத்துகின்றது, மக்களிடையே இருந்து வரும் பிரச்சினைகள் எவ்வாறு  மத்தியஸ்தம் செய்யப்படுகிறது, அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? என்பன போன்ற பல விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.


(றாசிக் நபாயிஸ்)
ஊடகவியலாளர்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours