(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு ஆனப்பந்தி இந்து மகளீர் கல்லூரியின் அதிபராக சக்கரவாணி சதீஸ்வரன் இன்று வெள்ளிக்கிழமை(19) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆனப்பந்தி இந்து மகளீர் கல்லூரிக்கான புதிய அதிபராக எஸ்.சதீஸ்வரன் இன்று காலை 9.00 மணியளவில் சுபவேளையில் தனது கடமைகளை கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி.எஸ்.பீ.ரவிச்சந்திரா,
புதிய அதிபராக கடமையேற்றுள்ள எஸ்.சதீஸ்வரன் 2005.7.9 திகதி பட்டதாரி ஆசிரியராக தனது முதல் நியமனத்தை கிரான் மத்திய கல்லூரியில் ஆசிரியபணியையும் ஆற்றி வந்தார்.2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் சேவை போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பிரதியதிபராக 2017 ஆம் ஆண்டு முதல் 2021.2.18 வரையும் கடமையாற்றி வந்த நிலையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் குறித்த பாடசாலைக்கு அதிபராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வாழைச்சேனை இந்துக்கல்லூரி,மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைகளின் பழைய மாணவர் ஆவார்.கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்ததோடு,அகில இலங்கை சமாதான நீதவானாகவும் இருந்த சமூக,சமய சேவைகளை ஆற்றியுள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours