(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின்கீழ் “சுரகிமு கங்கா” ஆறுகளைக் காப்போம் தேசிய சுற்றாடல் வேலைத்திட்டத்தின்கீழ் கிழக்கு மாகாணத்தில் கல்லோயாத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சுற்றாடல் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இத்தேசிய வேலைத்திட்டமானது சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தலைமையில் அமைச்சுக்களுக்கிடையிலான தேசிய முன்னெடுப்புக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டமானது பேன்தகு மற்றும் நீண்டகாலத் நிகழ்ச்சித்திட்டமாக நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் மாவட்ட ரீதியில் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த மாவட்ட செயலாளர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்திட்டத்தினை நiடுமுறைப்படுத்துவதற்கான குழுக்கூட்டம் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாக கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் இன்று (16) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஆறுகளைக் காப்போம் தேசிய நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாகவும், கிழக்கு மாகாணத்திற்கான கல்லோயாத் திட்டம் தொடர்பாகவும் பங்குதார அமைச்சுக்கள், திணைக்களங்களின் பிரதிநிதிகளுக்கு கிழக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபை பணிப்பாளர் எம். சிவகுமாரினால் தெழிவூட்டப்பட்டது.
இதன்போது மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, மத்திய சுற்றாடர் அதிகார சபை உதவிப் பணிப்பாளர் எஸ். கோகுலன், பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி, விவசாயம், கால்நடை, சமுர்த்தி, நீர்ப்பாசனம், தேசிய நீர் வழங்கள், காணிப்பயன்பாடு, சுகாதாரம், கலவி, பொலிஸ், அனர்த்த முகாமைத்துவம், சிவில் பாதுகாப்பு போன்ற பிரிவுகளின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்
Post A Comment:
0 comments so far,add yours