தமிழ் ஊடகவியலாளர் இராமலிங்கம் தில்லைநாயகத்தின் வீட்டிற்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் அவரது குடும்பத்தினரை அச்சுறுத்தியமையால் அவரது குடும்ப உறுப்பினர்கள் அச்ச நிலையில் வாழ்ந்து வருகின்றனர்
இச்சம்பவமானது வியாழக்கிழமை மாலை கல்முனையில் அமைந்துள்ள அவரதுவீட்டில் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பாக மேலும் தெரியவருகையில் ஊடகவியலாளர் தில்லைநாயகத்தின் வீட்டிற்குச்சென்ற இனந்தெரியாத நபர்கள் தாங்கள் வங்கி ஊழியர் என அடையாளப்படுத்தி பின்னர் ஊடகவியலாளர் தில்லை நாயகத்தின் மனைவி வங்கியில் பணம் எடுத்துவந்த போது மேலதிகமாக வங்கியில் வழங்கப்பட்டதாகக் கூறி அதனை வழங்குமாறும் பின்னர் ஊடகவியலாளர் தில்லைநாயகத்தை விசாரித்து மிரட்டும் தொணியில் விசாரித்ததாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறான மிரட்டும் செயலால் அச்சமடைந்த ஊடகவியலாளர் தில்லைநாயகத்தின் மனைவி கல்முனைப்பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்
இதற்குமுன்னர் இனந்தெரியாத நபர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து ; அவரது ஊடக கருவிகள் மற்றும் ஆவணங்களை எடுத்துச்சென்ற சம்பவம் கடந்தகாலங்களில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post A Comment:
0 comments so far,add yours