(வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கில் சமகாலத்தில் மழை பொழிந்து வருவதனால் டெங்கின் தாக்கம் மீண்டும் திவீரமாகிவருகிறது என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
டெங்குத்தாக்கத்தை கட்டுப்படுத்துமுகமாக சுகாதாரவைத்தியஅதிகாரிகள் புகைவிசிறும் செயற்பாடுகள் வீடுவீடாகச் சோதனையிடும் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீரின் ஏற்பாட்டில் டெங்குத் தொற்று ஏற்பட்டுள்ள 3இடங்களைச்சுற்றி புகைவிசிறும் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளார்.
பிரதம பொதுச்சகாதாரப்பரிசோதகர் சா.வேல்முருகு தலைமையில் நேற்று காரைதீவில் டெங்குத்தடுப்பிற்கான புகை விசிறும் நடவடிக்கை வெற்றிபரமாக முன்னெடுக்கப்பட்டது.




Post A Comment:
0 comments so far,add yours