மாளிகைக்காடு நிருபர் - நூருல் ஹுதா உமர்


பெண்களின் தற்போதைய கல்வி வளர்ச்சி எதிர்காலத்தில் மகளிர் தினம் மறைந்து ஆண்களுக்கான தினமாக மாறுகின்ற சூழல் தோன்றியுள்ளது என சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்று தனது முதல் நிகழ்வாக சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஸப்னா அமீன் தலைமையில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த அவர், பெண்களின் அற்பணிப்புக்கும் தியாகத்துக்கும் தனி ஒரு நாளில் கொண்டாடி அவர்களின் சிறப்பு பற்றி கூறிவிட முடியாது. பெண்கள் தினந்தோறும்  நினைவு கூறப்பட வேண்டியவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர் எம்.எம் சஹாப்தீனின் சிறந்த சேவைக்காகவும் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்டத்திற்கு பங்களிப்பு செய்த ஆறு பெண்கள்,  பெண் தலைமையாளர்களாக விளங்கிய சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.ஜே. நுஸ்ரத் பானு ஆகியோருக்கு  பிரதேச செயலாளரினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் ஏ. சி.ஏ.நஜீம், சமுர்த்தி முகாமையாளர்களான யு.எல்.ஏ. ஜுனைதா, ஏ.எம்.ஏ.கபூர், எம்.எஸ்.எம்.மனாஸ், உதவி முகாமையாளர் ஏ.எம். றியாத் உட்பட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகதத்ர்கள், பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours