(க.விஜயரெத்தினம்)
தமிழ் மக்களின் கண்ணீரிலும்,பிரச்சனைகளிலும் ஏறி இருந்து கொண்டு அரசியல் செய்யாமல் அவர்களின் கண்ணீரையும்,பிரச்சனைகளையும் முடிந்தளவு துடைக்கும் கரங்களாக நானும்,நான் சார்ந்தவர்களும் செயற்படவுள்ளோம்.நிலம் பறி போகின்றது அல்லது வளம் பறிபோகின்றது என அரசியல் செய்யாமல் நிலத்தையும், வளத்தையும் பாதுகாப்பதற்கு என்ன வழி? ,ஏன் பறிபோகின்றது? , என்பதற்கு தமிழ்தலைமைகள் விடை காணுவதற்கு முயற்ச்சிக்க வேண்டும்.கிழக்கு மாகாணத்தில் வலிமைமிக்க அரசியல் கட்டமைப்பை உருவாக்கி எம்மக்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக நானும்,நான் சார்ந்தவர்களும் தொடர்ச்சியாக பயணிப்பேன் என பின்தங்கிய கிராம அபிவிருத்தி,மனைசார், கால்நடை வளர்ப்பு,மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.அதிமேதகு ஜனாதிபதியின் "நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக நாட்டில் ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பின்தங்கிய கிராம அபிவிருத்தி,மனைசார், கால்நடை வளர்ப்பு,மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரின் பரிந்துரைக்கு அமைவாக மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சின்னகாலபோட்டமடு கிராமத்தின் பிரதான வீதியினை கொங்கிறீட் வீதியாக( 01 கிலோ மீட்டர்)ரூபா 2 கோடியே அறுபது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்படுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(30)பிற்பகல் 03.மணியளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை கிழக்கு மாகாண பணிப்பாளர் சிவகுமார்,பொறியியலாளர் துஸ்யந்தன்,அரச ஒப்பந்தகாரர் எஸ்.ரஞ்சித மூர்த்தி ,மண்முனை மேற்கு பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர்,அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், கிராமசேவை உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்...மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்துப் பிரச்சனைகளுக்கு மத்தியில் பல கிராமமக்கள் பல்வேறு துன்பங்களையும்,வலிகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.இக்கிராம மக்கள் ஒருவேளை அசம்பாவிதங்கள் நடைபெற்றால் 15கிலோமீற்றர் சுற்றிப்போக நேரிடும்.சிலவேளை பாம்புக்கடிக்குள்ளாகும் மக்கள் அல்லது குழந்தைகள் அதேபோன்று பிரசவத்திற்கு வைத்தியசாலைக்கு செல்வதற்காக பயணிக்கும் கர்ப்பிணி தாய்மார்கள்,நோயாளிகள்,விபத்தி
இன்றைக்கு வீதி ஒரு தேவையா? ,மலசலகூடம் தேவையா? ,வீடு தேவையா? ,கிணறு தேவையா? , தண்ணீர் தேவையா? ,அபிவிருத்தி தேவையா? , இதெல்லாம் தமிழர்களுக்கு தேவையான உரிமையா? ,என பிற்போக்குத்தனமாக கேள்வி கேட்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் நான் கேட்கும் விசயங்கள் இதுதான்.எங்களுக்கு உரிமை தேவை.அதோட அடிப்படை உரிமைகள் எனும் விடயங்களும் தமிழ்மக்களுக்கு தேவையானதாகும்.அதாவது பண்டமாற்று தேவைகளான உணவு,உடை,உறையுள் போன்ற அடிப்படை உரிமைகளும் காலத்தின் தேவையாக இருக்கின்றது.கடந்த மூன்று தசாப்த யுத்தத்தினால் அனைத்து உரிமைகளையும் இழந்துள்ள சமூகமாகத்தான் தமிழ்சமூகம் காணப்படுகின்றது.இதனை தமிழ் தேசிய தலைமைகள் புத்திக்கூர்மையுடன் உணர்ந்து கொள்ள வேண்டும்.கிழக்கு மாகாணத்தில் மற்றைய சமூகத்தின் வளர்ச்சிப்போக்கில் ஒப்பீட்டு பார்க்கும்போது எமது சமூகம் பல பின்னடைவுகளையும்,இழப்புக்களையு
எம்மைப் பொருத்தமட்டில் எனது இராஜாங்க அமைச்சானது பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி அமைச்சாகத்தான் காணப்படுகின்றது.எமது இராஜாங்க அமைச்சின் மூலம் பின்தங்கிய கிராமங்களை நோக்கித்தான் கூடுதலான வேலைத்திட்டங்கள் அமைந்திருக்கின்றது.இன்று காலை முதல் கிராமங்களில்தான் மக்களின் பிரச்சனைகளையும்,தேவைகளையும் கேட்டறிந்து அரசாங்கத்துடன் கதைத்து எம்மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு முற்ச்சிக்கின்றோம்.கிராமங்கள் தன்னிறைவு அடைய வேண்டும்.
இன்று பலர் சொல்லுகின்றார்கள்.அரசியலுக்காக பலர் பேசலாம்.பலர் ஏசி விமர்சிக்கலாம்.இன்று நிலம் பறி போகின்றது;வளம் பறி போகின்றது என்று வாய்க்கு வந்தாற்போல் பேசலாம்.பறிபோகும் நிலத்தை அல்லது வளத்தை பாதுகாப்பதற்கான என்ன வழி ? என்று கேட்டால் வழி தெரியாமல் பலர் விழி பிதுங்கி திக்குமுக்காடுகின்றார்கள்.வளத்
எல்லைக்புற கிராம மக்கள் வறுமையாக இருக்கின்றார்கள்.போக்குவரத்து பிரச்சனை,கல்வி பிரச்சனை,சுகாதார பிரச்சனை ,குடிநீர் பிரச்சனை,மின்சாரப்பிரச்சனை,வீ
இன்றைக்கு பார்த்தால் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 68 பாடசாலைகள் இருக்கின்றது.இப்பிரதேசத்தில் ஒரு தேசிய பாடசாலை இல்லை.ஒரு 1 ஏபி பாடசாலை இல்லை.கல்வியை தொடர்வதற்கு பாடசாலை வசதிகள்,பௌதீக வளங்கள் இல்லை.போக்குவரத்து வசதிகள் இல்லை.மின்சார வசதிகள் இல்லை .இவற்றை நாம் எமது அமைச்சு மூலம் செய்து காட்டுவதற்கு ஜனாதிபதி ,பிரதமரிடம் அனுமதி கேட்டிருக்கின்றோம்.இன்று போடப்படும் வீதியை நாங்கள் நான்கு மாதங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்து தற்போது 2கோடியே 60 இலட்சம் ரூபாவில் வீதி புனரமைக்கப்படவுள்ளது.இவ்வருடம் முடிவதற்குள் இயன்றளவு இப்பிரதேச மக்களின் வீடுவசதிகள்,மலசல கூட வசதிகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு நான் நம்பிக்கையுடன் வைத்திருக்கின்றேன்.
தமிழ் மக்களின் கண்ணீரிலும்,பிரச்சனைகளிலும் ஏறி இருந்து கொண்டு அரசியல் செய்யாமல் அவர்களின் கண்ணீரையும்,பிரச்சனைகளையும் முடிந்தளவு துடைக்கும் கரங்களாக நானும்,நான் சார்ந்தவர்களும் செயற்படவுள்ளோம்.படித்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு நான் அயராது உழைப்பேன்.கிழக்கு மாகாணத்தில் வலிமைமிக்க அரசியல் கட்டமைப்பை உருவாக்கி எம்மக்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக நானும்,நான் சார்ந்தவர்களும் தொடர்ச்சியாக பயணிப்போம் எனத்தெரிவித்தார்.






Post A Comment:
0 comments so far,add yours