மட்டக்களப்பு பிள்ளையாரடி விஸ்பரூப ஆஞ்சநேயர் ஆலயத்தின் ஸ்ரீராம நவமி விசேட பூசையானது எதிர்வரும் 21.04.2021 ஆந் திகதி புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
ஆண்டிற்கு ஒரு தடவை இடம்பெறும் இவ் விசேட பூசையானது எதிர்வரும் புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு வஜனையுடன் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் இடம்பெற்று, இராமபிரானுக்கு விசேட தீபாராதனையுடனான பூசைகள் இடம் பெறவுள்ளது.
விஸ்பரூப ஆஞ்சநேயர் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ உ.ஜெகதீஸ்வரன் குருக்கள் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள விசேட பூசையில் அனைத்து பக்தர்களும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக கலந்து கொண்டு
இராமபிரானின் இறையாசியை பெற்றுச் செல்லுமாறு இறையன்புடன் அழைக்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்.

Post A Comment:
0 comments so far,add yours