இந்துசமய கலாசாரஅலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பிரதி சனிக்கிழமைதோறும் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகிவரும் ஒருமணிநேர அறநெறிச்சார நிகழ்ச்சி நாளை(24)சனிக்கிழமை முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 97வது துறவறதினத்தையொட்டி விசேடநிகழ்ச்சியாக இடம்பெறவிருக்கிறது.
இந்துசமய கலாசாரஅலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அருளாநந்தம் உமாமகேஸ்வரன் இதற்கான ஏற்பாட்டைச்செய்துள்ளார்.
உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் 1924ஆம் ஆண்டு சித்ராபௌர்ணமி தினத்தில் சுவாமி விபுலாநந்தர் என்ற நாமத்துடன் துறவியானார்.
அவரது 97வது துறவறதினம் எதிர்வரும் 26ஆம் திகதி சித்ராபௌர்ணமியன்று அவர்பிறந்த காரைதீவு உள்ளிட்ட் தமிழ்கூறுநல்லுலகெங்கிலும் அனுஸ்ட்டிக்கப்படவிருக்கிறது.
அதனைமுன்னிட்டு நாளை சனிக்கிழமை காலை 7மணிமுதல் 8மணிவரை அறிவிப்பாளர் நாகபூஷணியின் விளக்கத்துடன் இடம்பெறவிருக்கும் அறநெறிச்சாரநிகழ்ச்சியில் நான்க பிரமுகர்கள் பங்குபற்றுகின்றனர்.
இராமகிருஸ்ணமிசன் மட்டு.மாநில துணை மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் ,காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன், காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றமுன்னாள் தலைவர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா, காரைதீவு இந்து சமய விருத்திச்சங்க அறநெறிப் பாடசாலை மாணவி செல்வி இரத்தினகுமார் ஜோதிர்மயி ஆகியோர் பங்குபற்றுகின்றனர் என்று மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி தெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours