வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மாலையர் கட்டு வைக்கியல்ல பிரதேசத்தில் வயல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்தில் பலியான சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக பெய்து வந்த மழை நேரத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 32 வதுடைய நல்லதம்பி-மோகனசுந்தரம் என்பவர் குறித்த பிரதேசத்தில் வயல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது திடீரென மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.மரணமாகவரின் பிரேதம் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேதத்ததை எடுத்துச்செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன்.பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours