(மண்டூர் மேலதிக நிருபர்)
முனைக்காடு கிழக்கு ஆற்றுப்பகுதியில் உள்ள கண்ணாக்காட்டுபகுதியில் கசிப்பு உற்பத்திக்காக தயார்படுத்தப்பட்டிருந்த கலவைப்பொருட்கள் அடங்கிய ஒரு தொகுதி பரல்கள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீண்டகாலங்களாக சட்டவிரோதமான முறையில் குறித்த பிர்தேசத்தில் விற்பனைக்காக தயார் படுத்தப்பட்டிருந்த கசிப்பு பரல்கள் காணப்படுவதாக கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்தினை சுற்றிவளைத்த பொலிஸார் குறிப்பிட்ட பரல்கள் கசிப்பு அடைக்கப்பட்ட பொத்தல்களை கைப்பற்றியுள்ளனர்.இதனை விற்பனைக்காக தயார் படுத்திய நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



Post A Comment:
0 comments so far,add yours