( வி.ரி.சகாதேவராஜா)

இந்து சமய கலாசார  அலுவல்கள்  திணைக்களத்தின்  ஏற்பாட்டில்   பொத்துவில் பிரதேச செயலகமும் அறநெறிப்  பாடசாலைகளும் இணைந்து நடாத்திய இந்து அறநெறி மாணவர்களுக்கு  நீதிநூல்கள் துணைநூல்கள்   வழங்கும் அறிமுக விழாவும் நூல் கண்காட்சியும் சிறப்பாக நடைபெற்றது.


நிகழ்வானது  பொத்துவில் ஆலயடிபிள்ளையார் அறநெறிப்  பாடசாலையில்   பிரதேச செயலாளர்  சந்தருவன் அநுருத்த தலைமையில் இடம்பெற்றது.

 இதில் முன்னிலை  அதிதியாக இந்துமதகுருமார் பிரதம அதிதியாக அம்பாறை மாட்ட மேலதிக  அரசாங்க  அதிபர் வே.ஜெகதீசன்  சிறப்பு  அதிதிகளாக  பொத்துவில்  பிரதேச சபை  உறுப்பினர்கள் கிராம  உத்தியோகத்தர் உத்தியோகத்தர்கள் மற்றும் சகல பாடசாலைகளின் அதிபர்கள் இந்து மன்றங்கள் பெற்றோர்கள் அறநெறிப்  பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள்  கலந்து  கொண்டதுடன்  மாணவர்களுக்கு  பிரிவு ரீதியாக நூல்கள்  வழங்கப்பட்டன.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours