எஸ். சதீஸ்



மட்டக்களப்புஇ மண்முனை மேற்கு பிரதேசத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட  இரண்டு வாகனங்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த கப்புகாமியின் ஆலோசனைக்கமைய பொலிஸ் உத்தியோகத்தர்களால் வௌ்ளிக்கிழமை (02) இரவு 11.30 மணியளவில்  காஞ்சிரங்குடாஇ குருந்தையடிமுன்மாரி பகுதியில் நடாத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது உழவு இயந்திரதப் பெட்டியில் அனுமதிப் பத்திரம் இல்லாமல் மண் எற்றியபோது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

உழவு இயந்திரங்களும்இ அதிலிருந்த  நான்கு நபர்களும் கைது செய்யப்பட்டுஇ இருவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் இருவரையும் இரு வாகனங்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும்  வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த கப்புகாமி தெரிவித்தார்.


 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours