மட்டக்களப்பு மாநகரை பொலித்தீன் பாவனையற்ற மாநகராக மாற்றுவோம் எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக விழிப்புணர்வு செயற்பாடு இன்று 20.04.2021 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு  மாநக ஆணையாளர் மா.தயாபரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த விழிப்புணர்பு செயற்பாடானது மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள பிரதான பஸ் தரிப்பிடம், சிறுவர் பூங்கா மற்றும்  மாநகர பொது சந்தை வளாகம் ஆகியவற்றில் இடம்பெற்றது.

இதன்போது பொதுமக்கள் மற்றும்  கடை உரிமையாளர்கள் மத்தியில் பொலித்தீன் பாவனையின் பாதகத்தன்மை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது அதிகளவிலான மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Thaayman

Post A Comment:

0 comments so far,add yours