தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு  சமுர்த்தி அபிமானி 2021 - சித்திரை புத்தாண்டு விற்பனை சந்தை , மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தின் கரவெட்டி  சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் ஆயித்தியமலையில் புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் இடம்பெற்றது 



இச் சந்தையில் உள்ளூர் வியாபாரிகள், சமுர்த்தி உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்கள், மற்றும் கூட்டுறவுச்சங்கங்களின் ஊடாக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு பிரதேச மக்களின் நன்மை கருதி சகாய விலையில் விற்பனை செய்யப்பட்டது



சமுர்த்தி வங்கி முகாமையாளர் பிரியதர்சினி அசோக்குமார்  தலைமையில் ஆயித்தியமலையில் நடைற்ற இவ் ஆரம்ப நிகழ்வில்,  பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், உதவி பிரதேச செயலாளர் எஸ். சுபா,  மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் அ. பாக்கியராஜா, மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் எஸ். சண்முகராஜா, பிரதி தவிசாளர் பி. செல்லத்துரை, சமுர்த்தி தலைமை முகாமையாளர் கலைச்செல்வி, முகாமைத்துவப் பணிப்பாளர் தங்கத்துரை மற்றும்  ஆயித்தியமலை
பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச சபை செயலாளர், பிரதேசபை வட்டார உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியே கத்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் சமுர்த்தி வங்கி, வலயப் பிரிவுகளின் நெறிப்படுத்தலுக்கமைவாக மக்களின் நலன்கருதி இந்த புத்தாண்டு சந்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours