திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் உடன் அமுலாகும் வகையில் விடுமுறை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கும் திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Post A Comment:
0 comments so far,add yours