கொரனா அச்சுறுத்தல் தீவிரம்பெற்றுவரும் நிலையில் கொரனா அச்சுறுத்தலிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா அச்சுறுத்தலில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் சுகாதார நடைமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்கச்செய்யும் வகையிலான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் முகக்கவசம் அணிந்துசெல்லாதவர்கள் மற்றும் போக்குவரத்தில் முறையாக சுகாதார நடைமுறைகளைப்பேணாத போக்குவரத்து சேவைகள் தொடர்பில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு தலையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெட்டியாராட்சி தலைமையில் இந்த நடவடிக்கைகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது முகக்கவசம் அணியாதவர்கள்,போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்களில் சுகாதார நடைமுறையை பேணாத வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

முகக்கவசங்களை சரியாக அணியாதவர்களுக்கு அது தொடர்பிலான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.இவ்வாறான தொடர்ச்சியான நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் இன்று முன்னெடுத்துள்ளனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours