(மண்டூர் மேலதிக நிருபர்)


வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாசின்வாவா வீதி மாவடிச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த (27) வயதுடைய ஜனுதீன் முஹம்மது நிஜாம் என்பவர் அதிகமான ஐஸ்வகை போதைப்பொருளை உட்கொண்டதனால் மரணமான சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தடைசெய்யப்பட்ட ஐஸ்வகை போதைப்பொருளை உட்கொண்டதனால் தனது வீட்டில் மயக்கமடைந்த நிலையில் அவரின் வீட்டார் அருகில் உள்ள வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி ஏ.இளங்கோவன் அவர்களினால் இன்று மேற்கொள்ளப்பட்;ட பிரேத பரிசோதனையில் குறித்த இளைஞன் அதிகமான ஐஸ்வகை போதைப்பொருளை உட்கொண்டமையில் மரணமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ;.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours