(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் மாபெரும் இரத்ததான முகாம் நாளை இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரும், இலங்கை அரசியலில் கிங் மேக்கருமான கௌரவ பஷில் ராஜபக்ஷ அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாபெரும் இரத்ததான முகாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச அபிவிருத்திக்குழுவின் பிரதித் தலைவருமான பரமசிவம் சந்திரகுமார் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயம், இருதயபுரம், மட்டக்களப்பில் நாளை (27.04.2021) காலை 8.30 தொடக்கம் பி.ப 4.00 மணிவரை நடைபெறவுள்ளது.
தானங்கனில் சிறந்த தானம் இரத்ததான மே! குருதி நன்கொடை வழங்க ஆர்வமுள்ளவர் 0771558213 ,0750233933 எனும் கைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

Post A Comment:
0 comments so far,add yours