மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று(26) சித்திரா பௌர்ணமி விரத பூசை நிகழ்வுகள் இடம்பெற்றது.இந்நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்
இன்றைய நாளில் நாம் வழிபடும் ஒவ்வொரு விஷயமும் நம்முடைய புண்ணியங்களையும், பாவங்களையும் பற்றியதாக இருப்பது நல்லது. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ எவ்வளவோ பாவங்களை செய்திருப்பீர்கள். அதற்கான மன்னிப்பு சித்திரகுப்தரிடம் கேட்டு விடுங்கள்.
சித்ரா பௌர்ணமி பற்றிய வலாற்றுக் கதையொன்று கூறப்படுகின்றது.
தேவலோகத்தில் எல்லோருக்கும் சிவபெருமான் வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். மக்களின் பாவ, புண்ணியங்களைக் கணக்கெடுக்கும் பணியை யாருக்கும் கொடுக்காதது அவருக்கு நினைவுக்கு வந்தது. இதற்காக புதிதாக ஒருவரை படைக்கத் தீர்மானித்தார் சிவபெருமான். இப்படி அவர் யோசித்தபோது, பார்வதி தேவி ஒரு பலகையில் அழகான பையனின் படத்தை வரைந்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த பெருமான், அந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார். இப்படி சித்திரத்திலிருந்து உருவானதால் அவர் சித்திரகுப்தன் எனப் பெயர் பெற்றார்.


Post A Comment:
0 comments so far,add yours