(மண்டூர் மேலதிக நிருபர்)


கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடியனாறு தேக்கஞ்சோலை பிரதேசத்தை சேர்ந்த ஒரு குழந்தையின் தாயான தெய்வேந்திரன் தெய்வலோஜினி வயது (21) என்பவரே தனது வீட்டில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பெதலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவரின் வருமானம் கானாததால் அவரோடு முறன்பட்டஇ இவர்இ தனது குழந்தையை அன்போடு தூக்குவதற்குக்கூட கணவருக்கு அனுமதி வழங்காமலிருந்துள்ளார்.

நேற்று மாலை குழந்தையை தூக்குவதற்காக. கணவர் சென்றபோதுஇ கொடுக்க மறுத்ததால்இ மனைவியை கடுமையாக ஏசியிருக்கிறார்.இதனால் மனஉளர்ர்சிக்குள்ளான நிலையில் நேற்றிரவு 07.00 மணிக்கெல்லாம் குழந்தையுடன் நித்திரை செய்துள்ளார்.இரவுச்சாப்பாட்டை உட்கொள்ள கணவர் அழைத்த போதுஇ எனக்கு பசியில்லைஇ நீங்க சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு மீண்டும் நித்திரை செய்துள்ளார். கணவரும் இரவுச்சாப்பாட்டை உட்கொண்டு விட்டு மனைவி குழந்தை ஆகியோர் உறங்கிய இடத்திலேயே உறங்கியுள்ளார்.

ஆழ்ந்த தூக்கத்திலிருந்த தந்தைக்குஇ தனது நெஞ்சில் கைவைத்து குழந்தை அழும் சத்தம் கேட்டதும்இ எழுந்து மனைவியை பார்த்தபோது காணாத நிலையில் அன்னார்ந்து பார்த்தபோது மின்விசிறியில் சாறியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்தாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கரடியனாறு  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours