(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான பிரதேச தொழிற்சந்தை ஆரையம்பதியில் இடம்பெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான
நேர்முகப்பரீட்சையினூடாக வேலைவாய்ப்பினையும், பயிற்சி நெறிகளை மேற்கொள்வதற்குமான பிரதேச தொழிற்சந்தை நேற்று 22.04.2021 ஆந் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்கு அமைவாக
மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஜீ.சிவாணி தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வினை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.லோகினி கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.

இதன்போது தொழிற் சந்தையில் பல்வேறு தொழில் வழங்குனர்கள் கலந்துகொண்டதுடன், அதிகளவிலான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours