சுஜிகரன்
காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூகம் (KDPS ) அமைப்பினரின் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் காரைதீவில் கணவனை இழந்து வாழ்ந்து வரும் 6 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் இவர்களுக்கான வாழ்வாதார உதவி நேற்று(2021-04-12) பி.ப 5.00 மணிக்கு KDPS அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அவ்வமைப்பின் தலைவர் நிர்வாக சபை உறுப்பினர்களும் காரைதீவு பிரதேச செயலாளர் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதற்கான நிதியுதவியினை புலம்பெயர் காரைதீவு உறவுகள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
* வழங்கப்பட்ட உதவிகள்
1. அரிசி அரைத்தல் இயந்திரம் Rs 55,000.00, தேங்காய் திருவும் இயந்திரம் Rs 6,500.00
2. மிளகாய் அரைத்தல் இயந்திரம் Rs 61,500.00 + பொருத்தல் செலவு
3. அரிசி வியாபாரம் Rs 25,000.00
4. துணி வியாபாரம் Rs 20,000.00
5. தேங்காய் வியாபாரம் -Rs 15,000.00


Post A Comment:
0 comments so far,add yours