வாகரை பிரதேச செயலாளரின் அயராத தொடர் முயற்சியினால் பால்சேனை மற்றும் கதிரவெளி மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.


பிரதேச செயலாளர் சு.ஹரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற செயலக காணிக் கிளை உத்தியோகத்தர்கள், பயனாளிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது முதற் கட்டமாக 100 பயனாளிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.

எதிர்வரும் வாரங்களில் ஏனைய கிராம பிரிவுகளுக்கும் அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்படும் என பிரதேச செயலாளர் சு.ஹரன் தெரிவித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours