பல்நோக்கு அபிவிருத்தி செயலணி ஊழியர்களின் ஒன்றுகூடல் : அதாஉல்லா எம்.பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நூருள் ஹுதா உமர்.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சாய்ந்தமருது நகரசபை கோரிக்கை, ஜனாஸா எரிப்பின் தாக்கம், மாகாண சபை தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலை தொடர்பில் நீண்ட உரையை நிகழ்த்தினார் (உரைத்தொகுப்பு நாளை வெளியிடப்படும்)
மேலும் இந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் சிரேஷ்ட பிரதித்தலைவர் டாக்டர் ஏ. உதுமாலெப்பை, இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினரும் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான ஏ.எல்.எம். சலீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ. ஹிபத்துள் கரீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் செயலாளர், பொருளாளர் உட்பட நிர்வாகிகள், தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





Post A Comment:
0 comments so far,add yours